அரையிறுதியில் ஆர்சனல், செல்சி

நேப்பல்ஸ்: யூரோப்பா லீக் காற் பந்துத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு செல்சி, ஆர்சனல் ஆகிய இங்கிலிஷ் குழுக்கள் தகுதி பெற்றன.
முன்னணி இத்தாலியக் குழுக் களில் ஒன்றான நேப்போலியை அதன் சொந்த அரங்கில் வைத்தே 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஆர்சனல். காலிறுதி முதல் ஆட்டத்திலும் ஆர்சனல் 2-0 என வென்றிருந்ததால் ஒட்டு மொத்த கோல் அடிப்படையில் 3-0 என முன்னிலை பெற்ற அக்குழு அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் கோலடித்து ஆர்சனலுக்கு வெற்றி தேடித் தந்தார் அலெக்சாண்டர் லாக்கஸெட். இதன்மூலம் சொந்த அரங்கில் மட்டுமே கோலடிக்கக் கூடியவர் என்ற தன்மீதான விமர் சனத்தையும் அவர் தகர்த்தார்.
தனக்குச் சொந்தமான ஸ்டாம் ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் செல்சி, செக் குடியரசின் ஸ்லாவியா பிராக் குழுவை 4-3 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. முதல் காலிறுதியிலும் செல்சி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.
சாம்பியன்ஸ் லீக்கில் ஸ்பர்ஸ், லிவர்பூல், யூரோப்பா லீக்கில் ஆர் சனல், செல்சி என இரு முக்கிய ஐரோப்பியக் காற்பந்துப் போட்டி களின் அரையிறுதிக்கு நான்கு இங்கிலிஷ் குழுக்கள் முன்னேறி இருப்பது கடந்த 35 ஆண்டுகளில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இரு சுற்றுகளாக நடைபெறும் அரையிறுதியில் ஆர்சனல், வெலன் சியாவையும் செல்சி, ஐன்டிராக்ட் ஃபிராங்க்ஃபர்ட் குழுவையும் எதிர்த்தாடவுள்ளன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ‘பைசிக்கிள் கிக்’ மூலம் அருமையான கோலடித்த அத்லெட்டிக் பில்பாவ் குழுவின் அடூரிஸ். படம்: இபிஏ

18 Aug 2019

கடைசி நேர கோலால் சோகம்