பெங்களூரு அணி குதூகலம்

கோல்கத்தா: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கோல்கத்தா அணியை பெங்களூரு வீழ்த்தி உள்ளது.
பெங்களூரு அணியின் வெற்றிக்கு அணித் தலைவர் விராத் கோஹ்லியின் சதம் முக்கிய காரணமாக அமைந்தது.
சொந்த மண்ணில் விளை யாடியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் தோற்கடிக்க முடியாமல் போனது.
பூவா தலையாவில் வென்ற கோல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்தீவ் பட்டேல், விராத் கோஹ்லி ஆகியோர் களமிறங்கினர்.
பார்த்திவ் பட்டேல் 11 ஓட்டங் களிலும் அக்‌ஷ்தீப் நாத் 13 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த மொயீன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மொயீன் அலி 28 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்சர்களுடன் 66 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முதலில் நிதானமாக ஆடிய கோஹ்லி அரைசதம் கடந்ததும் அதிரடியில் இறங்கினார்.
கடைசி கட்டத்தில் சிக்சர்கள், பவுண்டரிகளுமாக விளாசினார். கோஹ்லி 58 பந்துகளில் 4 சிச்சர்கள், 9 பவுண்டரிகளுடன் சதம் அடித்து 100 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து, 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோல்கத்தா அணி களமிறங்கியது.
கிறிஸ் லின், சுனில் நரைன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
கிறிஸ் லின் ஓர் ஓட்டம் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார்.
சுனில் நரைன் 18 ஓட்டங் களிலும் ‌ஷுப்மன் கில், ராபின் உத்தப்பா ஆகியோர் 9 ஓட்டங் களிலும் ஆட்டம் இழந்தனர்.
நிதிஷ் ராணாவுடன் ஆண்ட்ரே ரசல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பெங்களூரு அணி பந்து வீச்சை வெளுத்து வாங்கியது.
நிதிஷ் ரானா சிறப்பாக விளையாடி அரை சதமடித்தார். ஆண்ட்ரே ரசல் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார்.
அவர் 25 பந்துகளில் 65 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந் தார். நிதிஷ் ராணா 46 பந்துகளில் 85 ஓட்டங்களுடன் ஆட்டமிழக் காமல் இருந்தார்.
இறுதியில் கோல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் விளைவாக பெங்களூரு அணி 10 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் வென்றது. ஐபிஎல்லில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் பஞ்சாப் வீரர் கிறிஸ் கெய்ல் ஆறு சதங்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.
விராத் கோஹ்லி ஐந்து சதங்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

சதம் அடித்ததும் துள்ளிக் குதித்துக் கொண்டாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணித் தலைவர் விராத் கோஹ்லி (வலது).
அதை வாடிய முகத்துடன் பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தினேஷ் கார்த்திக் பார்க்கிறார்.
படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!