‘உண்மை நிலவரம் தெரிய வேண்டும்’

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் வீரர்களுக்குத் தங்கள் குழுவின் உண்மை நிலவரம் குறித்து தெரிய வேண்டும் என்று யுனை டெட்டின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் கூறியுள்ளார்.
கடந்த சில ஆட்டங்களில் யுனைடெட் தொடர் ஏமாற்றங் களைச் சந்தித்துள்ளது.
களமிறங்கிய ஏழு ஆட்டங்கள் அது ஐந்து ஆட்டங்களில் தோல் வியைத் தழுவியது.
கடந்த செவ்வாய்க் கிழமையன்று பார்சிலோனாவிடம் தோற்று சாம்பியன்ஸ் லீக் காற் பந்துப் போட்டியிலிருந்து யுனை டெட் வெளியேறியது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் யுனைடெட் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது.
நான்காவது இடத்தில் இருக்கும் ஆர்சனலைவிட அது இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.
ஐந்து ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் வேளையில் முதல் நான்கு இடங்களில் போட்டியை முடிக்க யுனைடெட் முனைப்புடன் இருக்கிறது.
இந்த இலக்கை அடைந்தால் மட்டுமே யுனைடெட்டால் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.
"நிர்வாகி பதவி ஏற்று சில மாதங்களில் யுனைடெட்டின் ஆட்டக்காரர்கள் பற்றி நன்கு அறிந்துகொண்டுள்ளேன். சிலரின் மனப்போக்கு என்னைப் பிரமிக்க வைத்துள்ளது.
"எஞ்சியிருக்கும் வீரர்களுக்கு உண்மை நிலவரம் தெரிய வேண்டும்.
"குழுவின் நிலை புரிய வேண்டும். எப்போதும் போல கடுமையாகப் பயிற்சி செய்தால் மேம்பட முடியும் என்று எங்கள் வீரர்களில் பலருக்குத் தெரியும்," என்று சோல்சியார் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!