ஜெய்ப்பூர்: இதற்குமுன் எட்டுப் போட்டிகளில் விளையாடி இரண் டில் மட்டுமே வென்றிருந்ததால் ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணித்தலைவர் பதவியிலிருந்து இந்தியாவின் அஜின்கிய ரகானே நீக்கப்பட்டு, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டார். ஸ்மித் தலைமையில் ராஜஸ் தான் களமிறங்கிய முதல் ஆட்டத் திலேயே வெற்றியும் தேடி வந்தது. பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கும் பலமிக்க மும்பை இந்தி யன்ஸ் அணியை ராஜஸ்தான் அணி நேற்று முன்தினம் எதிர் கொண்டது. முதலில் பந்தடித்த மும்பை அணிக்கு குவின்டன் டி காக் (65), சூர்யகுமார் யாதவ் (34), ஹார்திக் பாண்டியா (23) ஆகியோர் கைகொடுக்க, அந்த அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்களை எடுத்தது. இந்தப் பருவத்தில் ரகானேவின் சொதப்பலான பந்தடிப்பு இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. அவர் 12 ஓட்டங்களில் வெளியேறினார். இருப்பினும், சஞ்சு சாம்சன் (35), 17 வயதேயான ரியான் பராக் (43) ஆகியோருடன் சேர்ந்து பொறுப்பாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் ஸ்மித். அவர் ஆட்டம் இழக்காமல் 59 ஓட்டங்களை எடுக்க, 19.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை மட்டும் இழந்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற் றது. ஸ்மித் ஆட்ட நாயகனானார்.
அணித்தலைவர் மாறியதும் அதிர்ஷ்டமும் ஓடோடி வந்தது
1 mins read

