புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோற்றதற்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேற்று முன்தினம் இரவு பழிதீர்த்தது. மொகாலியில் இவ்விரு அணி களும் மோதிக்கொண்ட முதல் ஆட்டத்தில் டெல்லி அணி 16 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது. 167 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி, ஒரு கட்டத்தில் மூன்று விக்கெட் இழப் பிற்கு 144 ஓட்டங்கள் என வலு வான நிலையில் இருந்தது. ஆயினும், மேலும் எட்டு ஓட்டங் களைச் சேர்ப்பதற்குள் அவ்வணி எஞ்சியிருந்த ஏழு விக்கெட்டு களையும் இழந்து பரிதாபமாகத் தோற்றது. இந்த நிலையில், டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா அரங்கில் 2வது முறையாக இவ்விரு அணி களும் சந்தித்தன. முதலில் பந்த டித்த பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லும் (60) நடுவரிசை ஆட்டக்காரர் மந்தீப் சிங்கும் (30) சற்று நிலைத்து ஆடினர். இடையில் மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால் பஞ்சாப் அணியின் ஓட்டக் குவிப்பு மந்தமடைந்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் ஏழு விக் கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது. இரண்டு பந்துகள் எஞ்சிய நிலையில் டெல்லி அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 56 ஓட்டங்களை விளாசினார். இறுதி வரை களத்தில் நின்று 58 ஓட் டங்களை எடுத்து வெற்றி தேடித் தந்த டெல்லி அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்ட நாயக னாகத் தேர்வு பெற்றார். ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் பஞ்சாப் அணித் தலைவர் அஸ்வினுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பழிதீர்க்கப்பட்ட பஞ்சாப்
2 mins read
அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், இளம் ஆல்ரவுண்டர் சேம் கரன் என இருவரை ஒரே ஓவரில் வெளியேற்றி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய நேப்பாள சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லமிசானேவை (இடது) பாராட்டி மகிழும் டெல்லி அணித்தலைவர் ஷ்ரேயாஸ். படம்: ஏஎஃப்பி -

