ரொனால்டோ வரலாற்றுச் சாதனை

டூரின்: இத்தாலியக் காற்பந்து லீக்கில் விளையாடிய முதல் பரு வத்திலேயே அப்பட்டத்தை வென்று சாதித்துள்ளார் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இதன்மூலம் இங்கிலிஷ் பிரி மியர் லீக், ஸ்பானிய லா லீகா, இத்தாலிய லீக் என மூன்று வெவ்வேறு லீக்குகளில் பட்டம் வென்ற முதல் காற்பந்து ஆட்டக் காரர் என்ற சாதனைக்கும் ரொனால்டோ சொந்தக்காரரானார்.
ஃபியோரென்டினா குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ரொனால்டோவின் யுவென்டஸ் காற்பந்துக் குழு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் ஆறாவது நிமிடத் திலேயே கோலடித்து ஃபியோரென் டினாவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார் நிக்கோலா மிலென்கோவிச்.
ஆயினும், 37வது நிமிடத்தில் யுவென்டஸ் வீரர் அலெக்ஸ் சாண்ட்ரோ பாய்ந்து சென்று தலை யால் முட்டி பந்தை வலைக்குள் தள்ளியதால் ஆட்டம் சமனுக்கு வந்தது.
பிற்பாதியின் எட்டாம் நிமிடத் தில் ரொனால்டோ உதைத்த பந்தை எதிரணி ஆட்டக்காரர் ஜெர்மன் பெஸேலா தடுக்க முயன்றபோது பந்து அவர் மீது பட்டு வலைக்குள் புகுந்து கோலானது. இதனால் யுவென்டசின் வெற்றி உறுதியானது.
இதுவரை 33 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் யுவென்டஸ் குழு இரண்டில் மட்டுமே தோற்றது. 28 ஆட்டங்களில் வெற்றியைச் சுவைத்த அக்குழு, மூன்று ஆட் டங்களில் சமநிலை கண்டது.
இதன்மூலம், இன்னும் ஐந்து ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் நிலை யிலேயே யுவென்டஸ் பட்டத்தைக் கைப்பற்றியது. இரண்டாமிடத்தில் உள்ள நேப்போலி குழுவைவிட 20 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 87 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப் பதன் மூலம் நடப்பு இத்தாலிய லீக்கில் யுவென்டசின் கை ஓங்கி இருப்பது கண்கூடு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!