கிளோப்: கிண்ணத்துக்காக அல்ல, ரசிகர்களுக்காக 

கார்டிவ் சிட்டி: நேற்று முன்தினம் இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற் பந்துப் போட்டி ஒன்றில் கார்டிவ் சிட்டி குழுவை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்ட லிவர்பூல் அணியின் நிர்வாகி யகர்ன் கிளோப் தமது வீரர்களுக்கு ஊக்கமளிப்பது கிண்ணத்தை வெல்லும் எண்ண மல்ல, அவர்களின் முயற்சிகள் யாவும் ரசிகர்களுக்காக என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

லிவர்பூல் அணி கடந்த 1990ஆம் ஆண்டுக்குப் பின் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென் றிராத நிலையில், நேற்றைய வெற்றியின் மூலம் அது பட்டியலின் முதலிடத்துக்கு சென்றதுடன், இரண்டாம் நிலையிலுள்ள மான் செஸ்டர் சிட்டியை விட இரண்டு புள்ளிகள் கூடுதலாகப் பெற் றுள்ளது.

"கிண்ணத்தை வெல்வது மட்டுமே ஊக்கமாகக் கொண்டிருப் பின் நம்மிடம் ஏதோ குறை இருப்ப தாக அர்த்தம்.
"ரசிகர்களுடன் ஒன்றிணைந்து ஓர் உல்லாசப் பயணத்தில் நாங்கள் செல்ல விரும்புவதால் காற்பந்து ஆட்டங்களில் வென்று வருகி றோம்," என்று அவர் கூறினார்.
நேற்றைய ஆட்டத்தின் இரண் டாம் பாதியில் லிவர்பூலின் வைன்ஹால்டம், ஜேம்ஸ் மில்னர் ஆகியோர் போட்ட கோல்களால் லிவர்பூல் அணி வெற்றி வாகை சூடியது.

தொடர்ந்து பேசிய கிளோப், "பிரிமியர் லீக் போட்டிகள் முடி வுறும் நேரம் எங்களுக்கு எவ்வளவு புள்ளிகள் கிடைத்துள்ளன என்று பார்ப்போம். அதள்பின் கிடைக்க வேண்டியது எங்கள் கைகளுக்கு வந்துசேரும்.

"மற்ற குழுக்களின் விளை யாட்டுகளில் நாங்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அந்த விளையாட்டுகள் அவற்றின் போக் கில் செல்லும். எங்கள் குழுவிற் காக விளையாடுவதில் மட்டுமே நாங்கள் ஊக்கம் கொண்டுள்ளோம்.
"எங்களின் அடுத்த போட்டி ஹடர்ஸ்ஃபீல்டுடனான விளை யாட்டு. அந்த ஆட்டமும் வேறு பல காரணங்களால் கடுமையாகவே இருக்கும்.

"லிவர்பூல் ரசிகர்களில் சிலர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனாவை எதிர்கொள் வதைப் பற்றி சிந்தித்துக் கொண் டிருக்கிறோமோ என்று கேட்பர். ஆனால், நாங்கள் ஹடர்ஸ்ஃபீல்டுட னான போட்டியை மட்டுமே கருத் தில் கொண்டிருப்போம்," என்று கிளோப் விளக்கினார்.

மற்றோர் ஆட்டத்தில் மான் செஸ்டர் யுனைடெட் குழு எவர்ட்டன் குழுவிடம் 0-4 என்று எவரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மோசமாகத் தோல்வி அடைந்தது.
இதனால், அடுத்து நாளை மான்செஸ்டர் சிட்டியை எதிர்கொள் ளும் அந்தக் குழு வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில் தரவரிசைப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வரும் அதன் முயற்சியும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வேறோர் ஆட்டத்தில் ஆர் சனல் காற்பந்துக் குழு கிறிஸ்டல் பேலசிடம் 2-3 என்ற கோல் கணக்கில் தனது சொந்த அரங்கில் எதிர்பாராத விதமாக தோற்றது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் கார்டிவ் சிட்டியுடன் மோதிய லிவர்பூலின் முகம்மது சாலா எதிரணி வீரர் கைபட கீழே விழும் காட்சி. இதில் கிடைத்த பெனால்டியினால் லிவர்பூலின் ஜேம்ஸ் மில்னர் லிவர்பூலின் இரண்டாவது கோலை போட்டார். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!