ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்களைத் தாண்டிய முதல் இந்திய வீரர் டோனி

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ். டோனி பெற்றுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39வது லீக் ஆட்டம் பெங்களூரு வில் நேற்று முன்தினம் நடை பெற்றது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு அணிகள் மோதின. பூவா தலையாவில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுக்கு 161 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்து, 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு டன் சென்னை அணி களமிறங் கியது. முன்னணி வீரர்கள் அதிக ஓட்டங்கள் எடுக்காமல் விரைவில் வெளியேறினர்.

இதையடுத்து, டோனி தனி ஒருவராக போராடினார். அரை சதம் அடித்து அசத்திய அவர் 84 ஓட்டங்களுடன் வெளியாகாமல் இருந்தார்.
அவர் 48 பந்துகளில் ஏழு சிக்சர்கள், ஐந்து பவுண்டரி களுடன் 84 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம் ஐபிஎல் போட்டி களில் 200 சிக்சர்களைத் தாண் டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார். இதுவரை இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.
டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக்கத்தில் ஏற்கெ னவே தோற்றதற்கு அந்த அணி பதிலடி கொடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!