வெற்றிப் பாதைக்கு திரும்பிய ரியால் மட்ரிட் குழு

மட்ரிட்: ஸ்பானிய காற்பந்து லீக்கில் ரியால் மட்ரிட் குழு மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லெட்டிக் பில்பாவ் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் அக்குழு வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தின் இரண்டா வது பாதியில் 'ஹாட்ரிக்' கோல் களை அடித்து மட்ரிட்டின் வெற்றிக்கு வித்திட்டார் பிரெஞ்சு ஆட்டக்காரர் கரிம் பென்ஸிமா.

இந்தப் பருவத்தில் 21 லீக் கோல்களைப் புகுத்தியுள்ளார் பென்ஸிமா. 2015ஆம் ஆண்டு முதல் இந்தப் பருவத்தில்தான் அவர் இத்தனை கோல்களை அடித்துள்ளார். மட்ரிட்டுக்காக தாம் விளையாடிய கடைசி ஏழு ஆட்டங்களில் மட்டும் பென்ஸிமா 10 கோல்களைப் போட்டுள்ளார்.

தான் கடைசியாக விளையா டிய ஆட்டத்தில் லெகானிஸ் குழுவுடன் சமநிலை கண்ட மட்ரிட், இப்போது இந்த வெற்றி யின் மூலம் பட்டியலில் 64 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
பட்டியலின் முதல் இடத்தில் பார்சிலோனாவும் இரண்டாவது நிலையில் பரம எதிரியான அட்லெட்டிகோ மட்ரிட்டும் உள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!