சுடச் சுடச் செய்திகள்

கவலையில் மான்செஸ்டர் சிட்டி, சோர்வில் லிவர்பூல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் விருதைத் தட்டிச் செல்லும் கனவில் திளைக்கும் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் குழுக்களுக்கு அடுத்து வரும் ஆட்டங்கள் ஒருவாறு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. தற்போதைய நிலையில் தரவரிசைப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி 34 ஆட்டங்கள் விளையாடி 86 புள்ளிகள் எடுத்துள்ளது.

முதல் இடத்தில் உள்ள லிவர்பூல் அணி இரண்டு புள்ளிகள் கூடுதலாக எடுத்திருந் தாலும் ஓர் ஆட்டம் கூடுதலாக விளையாடியுள்ளது. இதில் மான்செஸ்டர் சிட்டியின் பாதையே கரடு  முரடான ஒன்றாக உள்ள தாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

சிட்டி குழு இன்று பின் னிரவில் மான்செஸ்டர் யுனை டெட் அணியுடன் மோதுகிறது. எவர்ட்டன் குழுவிடம் மோசமாகத் தோற்ற யுனைடெட் குழு தங்களிடம் அந்தக் கொதிப்பை காட்டுமோ என்ற கவலையில் சிட்டி வீரர்கள் இருப்பதாக செய் திகள் தெரிவிக்கின்றன.

இதற்குப்  பிறகு பர்ன்லி குழுவை சிட்டி சந்திக்கிறது. இதைத் தொடர்ந்து முன்னாள் லிவர்பூல் நிர்வாகி பிரண்டன் ரோஜர்ஸ் ஏற்று நடத்தும் லெஸ்டர் சிட்டி குழுவுடன் மான்செஸ்டர் சிட்டி மோதவுள்ளது. 

ரோஜர்ஸ் தலைமையில் முன்னேறி வரும் லெஸ்டர் சிட்டி குழு மான்செஸ்டர் சிட்டி குழுவுக்கு பிரச்சினை கொடுக் கலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்குப் பின் இறுதியாக பிரிமியர் லீக்கில் தொடர்ந்து இருக்க வாழ்வா, சாவா போராட்டத் தின் பிடியில் இருக்கும் பிரைட்டன் குழுவுடன் சிட்டி பொருதும்.

இப்படி எதிரணியினர் தங் களை எவ்வாறு எதிர்கொள்வர் என்று கணிக்க முடியாத நிலையில் இருக்கும் சிட்டி குழுவின் முக்கிய வீரரான கெவின் டி பிரய்ன காயம் காரணமாக விளையாட முடியாத நிலை இருப்பதால் சிட்டி குழு சிக்கலில் உள்ளதாகக் கூறப்படு கிறது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon