தங்கம் வென்றார் தமிழகத்தின் கோமதி

தங்கம் வென்றார் தமிழகத்தின் கோமதி

1 mins read
8619b73e-782e-4884-9da6-6636c1dad16a
வெற்றிக் களிப்பில் கோமதி. படம்: ராய்ட்டர்ஸ் -

டோஹா: 23வது ஆசியத் திடல்தட வெற்றியாளர் கிண்ண போட்டித் டோஹாவில் நடந்து வருகிறது.

இதில் இரண்டாவது நாளான நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயது இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடங்கள் 02.70 வினாடிகளில் பந்தயத்தை முடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

தங்கப்பதக்கம் வென்ற கோமதி தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆவார். இந்தப் போட்டித் தொடரில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும்.

ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.

ஈட்டி எறிதலில் இந்திய வீரர் ‌ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

அத்துடன் அவர் வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகத் திடல்தடப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

400 மீட்டர் தடை ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஜபிர் மதாரியும் பெண்கள் பிரிவில் சரிதா பென்னும் வெண்கலப்பதக்கம் வென்றனர்.