பர்ன்லியுடன் சமநிலை: செல்சிக்கு பின்னடைவு

பர்ன்லியுடன் சமநிலை: செல்சிக்கு பின்னடைவு

1 mins read
b4d2d8a7-8494-4fed-9717-cb095df40aa4
பர்ன்லியின் இரண்டாவது கோலைப் போடும் ஏஷதலி பார்ன்ஸ். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் செல்சிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அது பர்ன்லியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தை செல்சி எளிதில் வென்று மூன்று புள்ளிகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரு குழுக்களும் தரப்புக்கு இரண்டு கோல்களைப் போட்டு சமநிலை கண்டன.

லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வந்து சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற இலக்கு கொண் டிருக்கும் செல்சிக்கு இந்த சமநிலை பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. ஆர்சனல் நான் காவது இடத்துக்கு முன்னேறும் சாத்தியம் அதிகம் உள்ளது.