சொந்த மண்­ணில் சரிந்த யுனைடெட்

­மான்செஸ்டர்: இனி வரும் ஆட்டங்­க­ளில் சிறப்பாகச்­ செயல்பட்டு வெற்றி­ காணாவி­டில் நடப்பு இங்கிலிஷ் பிரிமி­யர் லீக்­கின் முன்னணி ஆறு குழுக்­க­ளில் ஒன்று என்ற நிலையை மான்செஸ்டர் யுனைடெட் இழக்க நேரிடலாம் என அக்­குழு­வின் நிர்வாகி ஒலே குனார் சோல்சி­யார் கவலை தெரி வித்­துள்­ளார்.

யுனைடெட்­டின் ஓல்ட் டிராஃபர்ட் விளை யாட்டரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்­டத்­தில் அக்­குழுவை மான்செஸ்டர் சிட்டி குழு 2-0 என்ற கோல் கணக்­கில் தோற்கடித்­தது.

இ­தன்மூலம் பட்டிய­லின் முதல்நிலையை மீண்­டும் எட்டிப்­ பிடித்­தது சிட்டி. இன்­னும் மூன்று ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலை­யில் இரண்­டாமி­டத்­தில் இருக்­கும் லிவர்பூலைவிட ஒரு புள்ளி மட்டுமே சிட்டி கூடுதலாகப்­ பெற்றுள்­ளது. இதனால் இந்தப்­ பரு­வத்­தின் வெற்றியாளர் பட்­டத்தைக்­ கைப்பற்ற அவ்­வ­ிரு குழுக்­க­ளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மாறாக, சிட்டியைவிட 25 புள்ளிகள் குறைவாகப்­ பெற்று 64 புள்ளி­க­ளு­டன் ஆறாமி­டத்­தில் இருக்­கிறது யுனைடெட்.

கடைசியாக ஆடிய ஒன்பது ஆட்டங் க­ளில் யுனைடெட் ஏழில் தோற்றுப்­போ­னது.

இதே போக்கு தொட­ரும் பட்­சத்­தில் வரும் ஆண்டு­க­ளில் உல்வ்ஸ், லெஸ்டர், எவர்ட்­டன் போன்ற குழு­க்­கள் யுனைடெட் டைப்­ பின்னுக்­குத்­ தள்ளிவிடக்கூ­டும் என்று சோல்சி­யார் எச்சரித்­துள்­ளார்.

"போட்டி முடி­வுகள் என்னைக்­ கவலைக்­ குள்ளாக்­கு­கின்றன. அதே நேரத்­தில், தோல் விக்கு இன்­னார்­தான் காரணம் எனக்­ குறிப்­பிட்டுச்­ சொல்வதற்கு இது உகந்த தருணமல்ல. வீரர்கள் ஒன்றிணைந்து ஆட வேண்­டும். நான்காவது இடம் எட்டிப்­ பிடிக்­ கும் தூரத்­தில்­தான் உள்­ளது என்பதை அவர்கள் உணரவேண்­டும்," என்­றார் அவர்.

நேற்றைய ஆட்­டத்­தில் பெர்­னார்டோ சில்வா (54'), லிரோய் சானே (66') ஆகிய இரு­வரும் சிட்டிக்காக ஆளுக்கு ஒரு கோலை அடித்­தனர்.

அடுத்து ­வரும் மூன்று ஆட்டங்களி­லும் வெற்றிபெ­றும் பட்­சத்­தில் வெற்றியாளர் பட்­டத்தை சிட்டி தக்கவைத்­துக்­கொள்­ளும். இதை அறிந்திருந்தபோ­தும் மெத்­தனமாக இருந்­து­விடாது, நிதானமாக­வும் பதற்றப்­ படாம­லும் விளையாடவேண்­டும் என சிட்டி நிர்வாகி பெப்­ கார்டியோலா தமது வீரர் க­ளுக்கு அறிவுறுத்­தியுள்­ளார்.

தோல்வியி­லும் துவளாத நம்பிக்கை

இதற்கிடையே, யுனைடெட்டைவிட இரண்டு புள்ளிகள் அதி­கம் பெற்று ஐந்தாம் நிலை­யில் இருக்­கும் ஆர்சனல் குழு­வும் அடுத்­தடுத்து இரு தோல்வி­களைச்­ சந்­தித்து அதிர்ச்சி அளித்­தது.

கடந்த வார இறுதி­யில் கிரிஸ்டல் பேலசிடம் 3-2 என்ற கோல் கணக்­கில் வீழ்ந்த ஆர்சனல், நேற்று உல்வ்சிடம் 3-1 என்ற கோல் கணக்­கில் மண்ணைக்­ கவ்­vயது.

இந்நிலை­யில், "எங்க­ளது கைவசம் இருந்த நான்காமி­டத்தைத்­ தக்கவைக்­கும் வாய்ப்பை பறி­கொடுத்­துவிட்டோம். கடின மான இலக்கு என்றபோ­தும் எங்­க­ளால் அதை மீட்­டெடுக்க இய­லும்," என்று நம்பிக்­ கையு­டன் கூறி­னார் ஆர்சனல் நிர்வாகி உனாய் எமெரி.

­

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!