ஏறுமு­கம் காணும் கோஹ்லி அணி

ஏறுமு­கம் காணும் கோஹ்லி அணி

1 mins read
3df47cf7-52c9-4815-9095-eb379d09bed2
-

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொட­ரில் தான் ஆடிய முதல் ஆறு ஆட்டங்களி­லும் தோற்று அவ­மானப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இப்­போது அதற்கு நேர்மாறாக வெற்றிநடை போடத் தொடங்கி உள்­ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்­ அணிக்கெதிராக நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்­டத்­தில் விராத்­ கோஹ்லி தலைமையி­லான பெங்களூரு அணி 17 ஓட்ட வித்­தியா­சத்­தில் வெற்றி­ பெற்றது. இது அந்த அணிக்­குக்­ கிடைத்த 'ஹாட்ரிக்' வெற்றி­ என்பது குறிப்­ பிடத்தக்கது.

முத­லில் பந்தடித்த பெங்களூரு ஒரு கட்­டத்­தில் 81 ஓட்டங்­க­ளுக்கு நான்கு விக்கெட்டு­களை இழந்து தத்தளித்­தது.

இந்நிலை­யில், 5வது விக்கெட் டுக்கு இணைந்த ஏபி டி வில்லி யர்­சும் மார்க்கஸ் ஸ்டோய்னி­சும் அதிரடியாக ஆட, பெங்களூரு அணி 200ஐத்­ தாண்­டியது.

டி வில்லி­யர்ஸ் 44 பந்­து­­க­ளில் 82 ஓட்டங்­களை விளாச, அந்த அணி 20 ஓவர்­க­ளில் நான்கு விக்கெட் இழப்­பிற்கு 202 ஓட்டங் களைக்­ குவித்­தது.

கடின இலக்கை விரட்டிய பஞ்சாப்­ அணி­யில் முன்னணி வீரர்கள் ஓரளவு பொறுப்­பு­டன் ஆடியபோ­தும் அதனால் ஏழு விக்­ கெட் இழப்­பிற்கு 185 ஓட்டங்­களை மட்டுமே எடுக்க முடிந்­தது.

42 ஓட்டங்­களை விளாசிய தொடக்க வீரர் ராகுல் டி20 போட்டி­க­ளில் அதிவேகமாக 3,000 ஓட்டங்­களை எட்டிய இந்தி­யர் என்ற சாதனை­யைப் படைத்­தார்.