கனவு அணியை ஆக்­கிரமித்த சிட்டி, லிவர்பூல்

கனவு அணியை ஆக்­கிரமித்த சிட்டி, லிவர்பூல்

1 mins read

லண்­டன்: இந்தப்­ பரு­வத்­தின் இங்கிலிஷ் பிரிமி­யர் லீக்­கிற்­கான கனவு அணி­யைத் தொழிற்முறை காற்பந்து விளையாட்டாளர்கள் சங்­கம் அறிவித்­துள்­ளது. அதில் மான்செஸ்டர் யுனைடெட் குழு­வின் பால் போக்பாவைத்­ தவிர மற்ற அனைத்து இடங்­களை­யும் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் குழுக்­களைச்­ சேர்ந்த­வர்களே ஆக்­கிரமித்து உள்­ளனர். மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் அறு­வரும் லிவர்பூல் வீரர்கள் நால்­வரும் கனவு அணிக்­குத்­ தேர்வாகியுள்­ளனர். பரு­வத்­தின் சிறந்த வீரராக லிவர்பூ­லின் வெர்ஜில் வேன் டைக்­ தேர்வு செய்யப்பட்­டார்.

கனவு அணி: கோல் காப்பாளர் - எடர்­சன்; தற்காப்பு வீரர்கள் - டிரென்ட் அலெக்சாண்டர் ஆர்னல்ட், வெர்ஜில் வேன் டைக், அய்மெரிக்­ லபோர்ட்டே, ஆண்ட்ரூ ராபர்ட்­சன்; மத்தி­யத் திடல் வீர்கள் - பால் போக்பா, ஃபெர்னாண்­டினோ, பெர்­னார்டோ சில்வா; தாக்­குதல் வீரர்கள் - ரஹீம் ஸ்டெர்லிங், செர்ஜியோ அகுவேரோ, சாடியோ மானே.