கோல்கத்தா: அடுத்து வரும் போட்டிகள் அனைத்திலும் வென்றால் மட்டுமே 'பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கைகூடும் என்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அந்த நம்பிக்கை ஈடேறும் என்ற எண்ணத்தை விதைத்து வருகின்றனர் அந்த அணியின் இளம் வீரர்கள்.
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட் டத்தில் நூறு ஓட்டங்களை எடுக்கும் முன்னரே ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டபோதும் 17 வயதான இந்திய வீரர் ரியான் பராக்கும் 24 வயதான இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் சேர்ந்து ராஜஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
முதலில் பந்தடித்த கோல்கத்தா அணியும் ஒரு கட்டத்தில் 80 ஓட்டங் களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆயினும், ஒற்றை ஆளாக அணியைத் தூக்கி நிறுத்தினார் அணித் தலைவர் தினேஷ் கார்த்திக். 50 பந்துகளில் 97 ஓட்டங்களை அவர் விளாச, 20 ஓவர் முடிவில் கோல்கத்தா அணி ஆறு விக் கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களை எடுத்தது.
அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் அஜின்கிய ரகானேவும் சஞ்சு சாம்சனும் நல்ல அடித்தளம் அமைத் தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட் டுக்கு 53 ஓட்டங்களை எடுத்தனர்.
முந்தைய போட்டியில் சதமடித்த ரகானே 34 ஓட்டங்களிலும் சாம்சன் 22 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித் (2), பென் ஸ்டோக்ஸ் (11) ஆகிய முன்னணி ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறியபோதும் ரியான் பராக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சரும் கோல்கத்தா வீரர் களின் பந்துகளை பவுண்டரிக்கு அனுப் பியபடி இருந்தனர். பராக் 31 பந்துகளில் 47 ஓட்டங்களையும் ஆர்ச்சர் 12 பந்துகளில் 27 ஓட்டங்களையும் விளாச, நான்கு பந்து களும் மூன்று விக்கெட்டுகளும் எஞ்சி இருந்த நிலையில் ராஜஸ்தான் அணி வெற்றியைச் சுவைத்தது. நான்கு ஓவர் களை வீசி 20 ஓட்டங்களை விட்டுத் தந்து இரு விக்கெட்டுகளைச் சாய்த்த ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் ஆட்ட நாயகன் ஆனார்.

