கவுன்டி போட்டி­க­ளில் விளையா­டும் ரகானே

கவுன்டி போட்டி­க­ளில் விளையா­டும் ரகானே

1 mins read

இந்திய கிரிக்கெட் அணி வீர­ரும் ஐபிஎல் டி20 போட்டி­க­ளில் ராஜஸ்­தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருப­வரு­மான அஜின்கிய ரகானே, 30, ஹேம்ப்‌ஷி­யர் அணிக்காக இங்கிலாந்து கவுன்டி போட்டி­க­ளில் ஆட இருக்­கி­றார். மே 12ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் முடிந்­த­தும் இங்கிலாந்து புறப்­படும் ரகானே, ஜூலை மாதம் வரை அங்கிருப்­பார். கவுன்டி சாம்பி­யன்‌ஷிப்­பில் ரகானே எட்டு போட்டி­க­ளில் ஆடு­வார். ஹேம்ப்‌ஷி­யர் அணிக்காக ஆடவி­ருக்­கும் முதல் இந்திய வீரர் இவரே. டெஸ்ட் போட்டி­க­ளில் இந்திய அணி­யின் துணைத்­ தலைவராக இருந்தா­லும் உலகக்­ கிண்­ணத் தொடருக்­கான அணி­யில் இவருக்கு இடம் கிடைக்க­வில்லை.