சோல்சி­யார்: பிரம்மாண்ட ஆட்டம்

சோல்சி­யார்: பிரம்மாண்ட ஆட்டம்

2 mins read

லண்­டன்: இங்கிலாந்து பிரிமி­யர் லீக்­ காற்பந்­து­ப்­ பட்டிய­லில் முதல் நான்கு இடங்­க­ளில் இடம்பெ­றும் முயற்சி­யில் முனைப்­பு­டன் இருக்­ கும் மான்செஸ்டர் யுனைடெட் நாளை செல்சியுட­னான மோதலை பிரம்மாண்ட­மான போட்டி என்று அதன் நிர்வாகி ஒலே குனார் சோல்சி­யார் வர்ணித்­துள்­ளார்.

­மான்செஸ்டர் யுனைடெட் கடைசியாக தான் விளையாடிய ஒன்பது ஆட்டங்­க­ளில் ஏழில் தோல்வியை சந்­தித்துள்ள நிலை யில், பட்டிய­லில் நான்காம் இடத் துக்கு ­வரும் வாய்ப்பு அதற்கு இன்ன­மும் இருக்­கிறது.

எஃப்ஏ கிண்ணம், ஐரோப்­பிய நாட்டுக்­ குழுக்­க­ளு­டன் போட்டி யிட்டு சாம்பி­யன்ஸ் லீக்­ விருதை வெல்­லும் வாய்ப்பு என இவை அனைத்­தும் வீணாகிவிட்ட நிலை யில், பிரிமி­யர் லீக்­கில் சொந்த அரங்கில் மான்செஸ்டர் சிட்டி குழுவிடம் 0-2 எனத் தோல்வி­யைத் தழுவியது யுனைடெட்­டின் மீதான நம்பிக்கையை மேலும் சீர்குலைத்து உள்­ளது.

எனி­னும், பிரிமி­யர் லீக்­கில் உள்ள மற்ற குழுக்­க­ளும் தோல்வி யடைந்து புள்ளி­களைக்­ கோட்டை விட்டுள்ளதால் யுனைடெட்­டின் வாய்ப்பு இன்­னும் முழுமையாகப்­ பறிபோக­வில்லை.

இந்த நிலை­யில்­தான் இன்­னும் மூன்று ஆட்டங்களே எஞ்சியுள்ள இந்த காற்பந்­து­ப்­ பரு­வத்­தில் தான் நிர்வாகியாகப்­ பதவியேற்றபோது கிடைத்த வெற்றி­களைப்­ போலவே மீதமி­ருக்­கும் ஆட்டங்களி­லும் வென்றாக வேண்­டிய கட்டா­யத்­தில் இருப்­பதை சோல்சி­யார் உணர்ந் துள்ளதாக பிபிசி செய்­தித் தகவல் கூறுகிறது.

இதற்கிடையே, நேற்று செய்தி யாளர்­களை சந்­தித்த சோல்சி­யார், யுனைடெட்­டின் நட்­சத்திர வீரர் பால் போக்பா அற்புதமாக விளை யாடி வருகி­றார் என்­றும் அவர் இதற்குமுன் இதைவிட சிறப்பாக விளையாடியுள்ளதால் தற்பொழுது அவருக்கு எதிரி அவரே என்­றும் விளக்­கி­னார்.

அத்­து­டன், பால் போக்பா அடுத்த பரு­வத்தி­லும் யுனைடெட்டி லேயே தொடர்­வார் என்று கூறி­ னார்.

ஆனால், இது குறித்து தம்மால் அறுதியிட்டுக்­ கூற முடியாது என்­றும் அவர் விளக்­கி­னார்.

மே­லும், மான்செஸ்டர் யுனை டெட் கோல்காப்பாளர் டி கியா குறித்துக்­ கருத்­துரைத்த சோல்சி யார் அவர் மீது தமக்கு நம்பிக்கை உள்ளதாக­வும் அவ­ரது ஆட்­டத் திறன் பற்றிக்­ கவலைப்ப­டத் தேவை­யில்லை என்­றும் தெரிவித்­ தார்.