லிவர்பூல்: ஹடர்ஸ்ஃபீல்ட் காற் பந்துக் குழுவிற்கெதிரான இங்கி லிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூல் குழு 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, புள்ளிப் பட்டியலில் அக்குழு மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. ஆட்டம் தொடங்கி 15 வினாடி களிலேயே லிவர்பூலின் முதல் கோலை அடித்தார் நபி கெய்ட்டா. பிரிமியர் லீக் வரலாற்றில் லிவர்பூல் வீரர் ஒருவர் அடித்த அதிவேக கோல் இதுதான். பின் சாடியோ மானேவும் முகம்மது சாலாவும் ஆளுக்கு இரண்டு கோல்களைப் போட்டு அசத்தினர். கடைசியாக தான் ஆடிய பத்து ஆட்டங்களிலும் லிவர்பூல் வென்றிருப்பது குறிப் பிடத்தக்கது. இன்றிரவு பர்ன்லி குழுவிற்கு எதிரான ஆட்டத்தை வெல்லும் பட்சத்தில் மான்செஸ்டர் சிட்டி குழு முதலிடத்திற்கு முன்னேறும்.
எதிரணியை வேட்டையாடிய லிவர்பூல்
1 mins read

