ஐபிஎல்: சென்னை படுதோல்வி

ஐபிஎல்: சென்னை படுதோல்வி

1 mins read

சென்னை: நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 2வது முறையாகத் தோற்றுப்போனது. காய்ச்சல் காரணமாக டோனி விளையாடாததால் சுரேஷ் ரெய்னா சென்னை அணித் தலைவராகச் செயல்பட்டார். ஆல்ரவுண்டர் ஜடேஜாவும் விளையாடவில்லை. அணித்தலைவர் ரோகித் சர்மா 67 ஓட்டங்களை விளாச, மும்பை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங் களை எடுத்தது. எட்டக்கூடிய இலக்குதான் என்றபோதும் முரளி விஜய் (38), டுவைன் பிராவோ (20), மிட்செல் சான்ட்னர் (22) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, சென்னை அணி 17.4 ஓவர்களில் 109 ஓட்டங்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தது. தோற்றாலும் சென்னை அணி முதலிடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 2ஆம் இடத்தில் உள்ளது.