பாரிஸ்: பிரெஞ்சு கிண்ண காற்பந்து இறுதி ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட் ஜெர் மெனின் (பிஎஸ்ஜி) குழுவை தோற்கடித்து கிண்ணத்தை வென்றது ரென் குழு. ஆட்டத்தின் இயல்பான நேரத்தின் முடிவிலும் கூடுதல் நேரத்தின் முடிவிலும் இரண்டு குழுக்களும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் பெனால்டி வாய்ப்புகள் தரப்பட்டன. அதில் ரென் குழு 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அரை நூற்றாண்டு காலத்தில் ரென் வென்ற முதல் வெற்றிக் கிண்ணமாகும் இது.
அதுவும் பிரான்சின் வலுமிகு குழுவான பிஎஸ்ஜியை தோற்கடித்துள்ளதால் அக்குழுவின் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர். முன்னதாக நடந்த சுற்று ஆட்டங்களில் ரென் குழு பிஎஸ்ஜி குழுவிடம் மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது.

