ஸ்பானிய லீக் விருதை  வென்றது பார்சிலோனா

பார்சிலோனா: ஸ்பானிய காற்பந்து ஜாம்பவானான பார்சிலோனா குழுவுக்குத் தாம் விளையாடிய 11 காற்பந்துப் பருவங் களில் 8வது முறையாக 'லா லீகா' விருதை வென்று தந்துள்ளார் அதன் காற்பந்து நட்சத்திரம் லையனல் மெஸ்ஸி.

நேற்று முன்தினம் லெவாண்டே குழுவுக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் மெஸ்ஸி ஆட்டத் தின் ஒரே கோலைப் போட்டு, பார்சிலோனா குழு லீக் தொடரை முடிக்க இன்னும் மூன்று ஆட்டங் கள் எஞ்சியிருக்கும் நிலையில் அக்குழுவுக்கு வெற்றியையும் லீக் விருதையும் பெற்றுத் தந்துள்ளார்.

இரண்டு குழுக்களும் கோல் எதுவும் போடாமல் சமநிலையில் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், பிற்பாதி ஆட்டத்தில் மெஸ்ஸி மாற்று ஆட்டக்காரராகக் களத்தில் இறக்கப்பட்டார்.

திடலுக்குள் வந்தவுடன் ஆட்டத்­தின் ஓரே கோலை மெஸ்ஸி போட்டார். அதுவே வெற்றிக் கோலாகவும் அமைந்தது.

'லா லீகா' பட்டியலில் இரண் டாம் நிலையில் உள்ள அட்லெட் டிக்கோ மட்ரிட் குழுவைக் காட்டி லும் பார்சிலோனா குழு ஒன்பது புள்ளிகள் வித்தியாசத்தில் பட்டி யலில் முதல் இடத்தைப் பெற்று விருதைக் கைப்பற்றியது.

இது பார்சிலோனா பெற்றிருக் கும் 26வது ஸ்பானிய 'லா லீகா' விருது.

இருப்பினும், அது 33 முறை இவ்விருதை வென்றிருக்கும் ரியால் மட்ரிட் குழுவைக் காட்டிலும் பின்தங்கியே இருக்கிறது.

"மிக சவால்மிக்க எதிரணி களைக் கொண்ட லீக்கில் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் தொடர்ந்து இரண்டாவது ஆண் டாக விருதை வென்றிருப்பது பெருமை தரும் அம்சம்," என்றார் பார்சிலோனா குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் எர்னெஸ்டோ வல்வெர்டே.

"பார்சிலோனாவின் வெற்றியை அதன் ரசிகர்கள் கொண்டாடுவ தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக் கிறது. ஆனால், எங்கள் பணி இத்துடன் முடியவில்லை. இன்னும் பல சவால்களை நாங்கள் சந்திக்க எங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும்," என்றும் திரு வல்வெர்டே மேலும் கூறினார்.

வரும் புதன்கிழமை நடைபெற விருக்கும் லிவர்பூல் குழுவுக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் முதல் சுற்று அரையிறுதி ஆட்டத்துக்காக வல்வெர்டே மெஸ்ஸியைக் களம் இறக்காமல் வைத்திருந்தார்.

ஆனால், பிற்பாதியில் வேறு வழியின்றி பிலிப் கொட்டின்யோ வுக்குப் பதிலாக மெஸ்ஸி ஆட்டத் துக்கு அனுப்பப்பட்டார். கொட்டின்­யோ­வும் லுயிஸ் சுவா ரெசும் லெவாண்டேயின் கோல் முனையை முற்றுகையிட்டபடி இருந்தனர்.

ஆனால், பலன் எதுவும் கிட் டாத நிலையில் மெஸ்ஸியின் உதவி தேவைப்பட்டது. எதிர்பார்த்த துபோல, ஆட்டத்தின் 62வது நிமி டத்தில் லெவாண்டே கோல் எல் லையில் பார்சிலோனா நிகழ்த்திய முற்றுகையைப் பயன்படுத்தி மெஸ்ஸி தனக்கே உரித்தான பாணியில் ஆட்டத்தின் ஒரே கோலைப் போட்டார்.

இந்த முக்கியமான வெற்றி தந்துள்ள ஊக்கத்துடன் இங் கிலாந்தின் லிவர்பூல் குழுவைச் சந்திக்க தயாராக உள்ளது மெஸ்ஸி தலைமையிலான பார்சி லோனா குழு.

பார்சிலோனா குழுவுக்கு தாம் விளையாடிய 11 காற்பந்துப் பருவத்தில் 8வது முறையாக ஸ்பானிய 'லா லீகா' விருதைப் பெற்றுத் தந்துள்ளார் அதன் நட்சத்திர ஆட்டக்காரர் லையனல் மெஸ்ஸி. நேற்று முன்தினம் 'லா லீகா' விருதைப் பெற்ற மெஸ்ஸி மகிழ்ச்சியில் திளைத்தார்.

படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!