சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின், பிசிசிஐ-க்கு ஆலோசனை வழங்கும் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஆலோசகராகச் செயல்படுகிறார். இதனால் இரட்டை ஆதாயம் தரும் பொறுப்புகள் வகிப்பதாக சச்சின் மீது சஞ்சீவ் குப்தா என்பவர் பிசிசிஐயில் புகார் கூறியிருந் தார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து எவ்வித ஆதாயமும் பெறவில்லை.
அந்த அணியில் எந்த வொரு பதவியையும் வகிக்கவில்லை என்று சச்சின் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

