சுடச் சுடச் செய்திகள்

மான்செஸ்டர் யுனைட்டட், செல்சி சமநிலை

இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும் செல்சி அணிக்கும் இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

லீக் பட்டியலின் முதல் ஐந்து நிலைகளில் யுனைட்டட் இடம்பெறாததால் துவண்டுபோயிருக்கும் அதன் ரசிகர்களை, ஆட்டம் தொடங்கிய 11 நிமிடங்களில் யுனைட்டட் அணிக்குக் கிடைத்த முதல் கோல் சற்று உற்சாகமடையச் செய்தது. யுனைட்டட் அணிக்காக அந்த கோலைப் பெற்றுத் தந்த யுவான் மாட்டாவுக்கு லூக் ஷா துணைபுரிந்தார். ஆயினும், இந்த வெற்றி நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் செல்சி அணிக்காக மார்கோஸ் அலோன்சோ இடது காலால் கோலைப் புகுத்தி கோல் கணக்கைச் சமநிலை ஆக்கினார்.

மற்றோர் ஆட்டத்தில் ஆர்சனல் அணி, லெஸ்டர் அணியிடம் 3-0 கோல் கணக்கில் தோல்வி கண்டது. அரையாட்டம் வரை எந்த அணியும் கோலைப் புகுத்தவில்லை. ஆயினும் 59வது நிமிடத்தில் யூரி டிலமாஸ் ஒரு கோலைப் புகுத்தினார். ஜேமி வார்டி மற்றோர் ஆட்டத்தில் இரண்டு கோல்களையும் புகுத்தினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon