அஜர்பைஜான்: இவ்வாண்டின் நான்காவது எஃப்1 கார் பந்தயத் தில் மெர்சிடிஸ் வீரர் வெலட்டேரி போட்டாஸ் (1:31:52 வினாடிகள்) பட்டம் வென்றார்.
முதல் பந்தயத்தில் போட்டாசும் அடுத்த இரு பந்தயங்களில் ஹேமில்டனும் வென்றனர். இத னால் நான்கு போட்டிகளிலும் தொடர் வெற்றியைப் பதிவு செய்த முதல் குழு என்ற பெருமையை பெற்றுள்ளது மெர்சிடிஸ்.
அஜர்பைஜானில் நேற்று முன் தினம் நடந்த 4வது பந்தயத்தில் லூவிஸ் ஹேமில்டன் இரண்டாம் இடத்தையும் ஃபெராரி குழுவின் செபாஸ்டியன் வெட்டல் 3வது இடத்தையும் பிடித்தனர்.

