செல்சிக்குப் பிரகாசம்; மேன்யூவுக்கு இழுபறி

மான்செஸ்டர்: பிரிமியர் லீக் காற் பந்துப் போட்டியொன்றில் செல்சி, மான்செஸ்டர் யுனைடெட் குழுக் கள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

யுனைடெட் கோல் காப்பாளர் டாவிட் ட கியா செய்த தவற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் நீடிக்கும் வாய்ப்பை செல்சி அதிகரித்துக்கொண்டது.

இதனால் அடுத்த பருவ சாம் பியன்ஸ் லீக் காற்பந்துப் போட் டிக்கு தகுதி பெறும் வாய்ப்பும் அந்தக் குழுவிற்குப் பிரகாசமாக உள்ளது.

எதிரணி கோல்போட வாய்ப் பளித்த மேன்யூவோ பட்டியலில் கீழிறங்கியதால் சாம்பியன்ஸ் லீக் கிற்குத் தகுதிபெற போராட வேண்டிய நிலையில் உள்ளது.

நேற்று அதிகாலை நடந்த இந்த ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் யுவான் மாட்டா போட்ட கோலால் முன்னிலை பெற்றது மேன்யூ.

பிற்பாதி ஆட்டத்தின்போது, செல்சியின் அன்டோனியோ ரடிகர் கொடுத்த பந்தை வலையை நோக்கி உதைத்தார் சக வீரர் மார்க்கோஸ் அலோன்சோ.

எளிதில் தடுத்திருக்கக்கூடிய அப்பந்தை மேன்யூ கோல் காப் பாளர் டாவிட் ட கியா தடுக்கத் தவறியதால் கோலாகி ஆட்டம் சம நிலை கண்டது.

ஆனால், இடைநிறுத்தத்திற் கான கூடுதல் நேரத்தின்போது செல்சியின் ஹிகுவைன் உதைத்த பந்து கோலாகாமல் ட கியா தடுத்ததால் மேன்யூ தோல்வியில் இருந்து தப்பியது.

எப்படியிருந்தாலும் கடைசி நான்கு ஆட்டங்களில் ட கியா வின் தவற்றால் மேன்யூ மூன்று கோல்களை விட்டுக்கொடுக்க நேர்ந்தது.

அதிலும் சிட்டிக்கு எதிராக ஒரு கோலையும் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனாவிற்கு எதிராக ஒரு கோலையும் ட கியாவால் விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

எனவே எஞ்சியிருக்கும் இரு ஆட்டங்களில், ட கியாவிற்கு மேன்யூ நிர்வாகி சோல்சியார் வாய்ப்புக் கொடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவருக்குப் பதிலாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் செர்ஜியோ ரொமேரோவிற்கு வாய்ப்பு அளிக்கப்படக்கூடும்.

இன்னோர் ஆட்டத்தில் ஆர் சனலை 3-0 என்ற கோல் கணக் கில் வீழ்த்தியது லெஸ்டர் குழு.

இதனால், கடைசி மூன்று ஆட் டங்களாக தோல்வியைத் தழுவி வந்த ஆர்சனலின் சாம்பியன்ஸ் லீக் வாய்ப்பு மங்கியது.

மற்றோர் போட்டியில் பர்ன்லி குழுவை 0-1 என்ற கோல் கணக் கில் வெற்றி கொண்ட மான்செஸ் டர் சிட்டி, லிவர்பூல் குழுவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!