இங்கிலாந்து அணியிலிருந்து ஹேல்ஸ் நீக்கம்

இங்கிலாந்து அணியிலிருந்து ஹேல்ஸ் நீக்கம்

1 mins read

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க பந்தடிப்பாளர் அலெக்ஸ் ஹேல்ஸ் உலகக் கிண்ணத்திற்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

போதை மருந்து உட்கொண்டதாக எழுந்த புகாரை அடுத்து, ஹேல்சுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவர் போதை மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்படவே, அவருக்கு 21 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

உலகக் கிண்ணத்திற்கான அணியில் இருந்து நீக்கப்பட்டது மட்டுமல்லாமல், அயர்லாந்து, பாகிஸ்தான் தொடரிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அணி முக்கிய தறுவாயில் இருப்பதால், தேவையில்லாத கவனச்சிதறல்கள் வரக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மதுபான விடுதி ஒன்றில் சக வீரர் பென் ஸ்டோக்ஸுடன் சேர்ந்து ஒருவரைத் தாக்கிய சம்பவத்தால் ஹேல்சும்

ஸ்டோக்சும் தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.

ஹேல்சுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் ஃபோக்ஸ் அல்லது ஜோப்ரா ஆர்ச்சர் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.