வேக விளையாட்டில் அதிர வைக்கும் லிவர்பூல்

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து அரையிறுதிப் போட்டி யின் முதல் சுற்றில் இன்று பின் னிரவு பார்சி லோனாவை எதிர் கொள்ளும் லிவர்பூல் தனது வேக விளை யாட்டால் பார்சிலோனாவை அதிர வைக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. அண்மையில் ஸ்பானிய லா லீகாவில் லெவான்டே குழுவுடன் மோதிய பார்சிலோனா குழுவினர் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வென்றபோ திலும் அவர்கள் கோல் போடும் வாய்ப்புகள் பலவற்றை வீணடித்த தாகவும் முனைப்பின்றி விளையா டினர் என்றும் கூறப்படுகிறது.

அவர்கள் விளையாடிய விதத் தைப் பார்த்த லிவர்பூல் ரசிகர்கள், இறுதி ஆட்டத்திற்கு தகுதிபெற்று விடலாம் என்ற நம்பிக்கையில், இப்பொழுதே மியூனிக்கில் (இறுதிப் போட்டி மியூனிக்கில் நடைபெற உள்ளது) ஹோட்டல் தங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்துவிட்ட தாக பரபரப்புத் தகவல்கள் தெரி விக்கின்றன.

அதிக நெருக்கடி கொடுக்கும் விளையாட்டு முறை, வீரர்களின் உடற்தகுதித் திறன், வேகமாக பந்தை தட்டிச்செல்லும் விதம், மூவர் அடங்கிய முன்னிலை தாக்குதல் வீரர்கள், ஃப்ரீகிக் போன்ற சந்தர்ப்பங்களில் எம்பிக் குதித்து பந்தை தலையால் முட்டி கோல் வலைக்குள் போடும் விதம் போன்றவை பார்சாவை திக்குமுக் காட வைக்கும் என்று நம்பப்படுவ தாக செய்தித் தகவலல்கள் கூறு கின்றன.

கடந்த ஆறு ஆண்டுகளில் தங்களது சொந்த அரங்கான நூ காம்ப்பில் விளையாடிய ஐரோப்பிய காற்பந்து ஆட்டங்கள் 31ல் 28 ஆட்டங்களில் வென்று, மீதி மூன்றில் சமநிலை கண்ட பார்சி லோனாவின் சாதனை உண்மை யிலேயே மற்ற குழுக்களுக்கு பீதியைக் கிளப்பக்கூடியதே. ஆனால், அரையிறுதி ஆட்டமொன் றில் பயர்ன் மியூனிக் குழு 7-0 என்ற கோல் எண்ணிக்கையில் பார்சிலோனாவை செம்மையாக உதைத்ததைப் பார்த்தவர்கள் அந்தக் குழுவை வெற்றிகொள் வது அப்படி ஒன்றும் முடியாத காரியமல்ல என்று கூறுவர்.

அந்த பயர்ன் மியூனிக் குழு வில் விளையாடிய வீரர்களில் ஒரு வரான ஸெர்டான் ஷக்கிரி தற் பொழுது லிவர்பூல் குழுவில் உள் ளார்.

அவரிடம் கேட்டாலே தெரியும் பார்சிலோனா குழுவினரால் வேக விளையாட்டு, அவர்களை அடக் கும் விதமாக நெருக்குதல் கொடுத்து விளையாடுவது போன்றவற்றுக்கு அவர்களால் ஈடு கொடுக்க முடியாது என்கின்றனர் லிவர்பூல் ரசிகர்கள்.

பயர்ன் மியூனிக்கிடம் தோற்ற இரண்டு ஆண்டுகளுக்கு பின் லுயிஸ் என்ரிக்கேயின் நிர்வாகத் தில் பயர்ன் மியூனிக் குழுவை எதிர்கொண்ட பார்சிலோனா வெற்றி பெற்றது. அதற்குக் காரணம், லுயிஸ் என்ரிக்கே தனது களத்தில் முதலில் இறக்கப் படும் முதல் 11 வீரர்களை மாற்றி மாற்றி இறக்கி முக்கிய வீரர் களுக்கு தேவையான ஓய்வு கொடுத்தது என்று கூறப்படுகிறது. இதிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், போதிய ஓய்வுடன் புத்துணர்ச்சி உடனான குழு ஒன்றை பார்சி லோனா களம் இறக்கினால் மட்டுமே அதன் வெற்றி வாய்ப்பு சொல்லிக் கொள்ளும்படியாக இருந்து லிவர்பூல் குழு மண்ணைக் கவ்வும் சாத்தியம் உள்ளதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

பார்சிலோனா மீண்டும் சாம்பியன்ஸ் லீக் விருதை வெல்ல வேண்டுமாயின், அதன் தாக்குதல் ஆட்டக்காரர்கள் வேக விளை யாட்டில் முனைப்புக் காட்டி பந்தை எடுத்துச் செல்வதிலும் கோல் போடுவதிலும் குறி தவறாமல் விளையாட வேண்டும.

ஆனால், லிவர்பூலின் அண் மைய கால ஆட்டங்களைப் பார்க்கும்போது அந்தக் குழு ஆட்டத்திறனின் உச்சத்திற்கு சென்று கொண்டிருப்பதாகத் தெரி வதாக காற்பந்து விமர்கர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் அந்தக் குழுவை வெல்வது கடினம் என்றே கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!