குறைகூறிய ரசிகரைத் தாக்கிய நெய்மார்; சாடிய நிர்வாகி

பாரிஸ்: பிரெஞ்சு கிண்ணத்தை மயிரிழையில் நழுவவிட்ட பாரிஸ் செயின்ட் ஜெர்மைனின் (பிஎஸ்ஜி) காற்பந்துக் குழுவைக் குறைகூறிய ரசிகர் ஒருவரைத் தாக்கிய அக்குழுவின் நட்சத்திர ஆட்டக் காரர் நெய்மாரை அக்குழு நிர்வாகி தாமஸ் டஹல் சாடினார்.

பிஎஸ்ஜி அண்மையில் பிரெஞ்சு லீக் கிண்ணத்தை ஏந்தியது. லீக்கின் 11வது இடத்தில் உள்ளது ரென் குழு.

இந்நிலையில், கடந்த ஞாயிற் றுக்கிழமை நடைபெற்ற பிரெஞ்சுக் கிண்ண இறுதிப் போட்டியில் ரென் குழுவுடன் பொருதியது பிஎஸ்ஜி. கடைசி நேரம் வரை 2-2 எனும் கோல் கணக்கில் ஆட்டம் சமநிலையில் இருந்ததால், பெனால்டி வரை ஆட்டம் சென்றது. அதில் 6-5 எனும் கோல் கணக்கில் எதிர்பாராமல் ரென் குழு வெற்றி கண்டது பிஎஸ்ஜிக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

அதன் பிறகு, பிரெஞ்சுக் கிண்ணப் போட்டியில் இரண்டாம் நிலையில் வந்த பிஎஸ்ஜி ஆட்டக் காரர்கள், பதக்கத்தைப் பெற்றுக் கொள்ள மேடையேறினர்.

அப்போது அருகிலிருந்து அவர்களைக் கைபேசி மூலம் காணொளி எடுத்துக்கொண்டு இருந்த 28 வயது ரசிகர் ஒருவர், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎஸ்ஜி குழு தோல்வியுற்றது குறித்து குறைகூறினார்.

இதைக் காதில் வாங்கிய நெய்மார், பொருள் விநியோக ஓட்டுநராக பணிபுரியும் அந்த ரசி கரின் கைபேசியைப் பிடுங்கி அவரது முகத்தில் வீசினார். இந்தச் சம்பவம், மற்ற ரசிகர்கள் எடுத்த காணொளியில் பதிவாகி இணையத்தில் வலம் வந்தது.

இது குறித்து கருத்துரைத்த பிஎஸ்ஜி நிர்வாகி டஹல், நெய்மாரின் இந்தச் செயல் தமக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்துள்ள தாகக் குறிப்பிட்டார்.

"வென்றிருக்க வேண்டிய ஆட்டத்தில் தோல்வியுற்றால் அதை ஏற்றுக்கொள்வதற்கு ஆட் டக்காரர்கள், எனக்கு, ரசிகர்கள் அனைவருக்கும் கடினமாகத்தான் இருக்கும்.

"எனினும், தோல்வி என வரும் போது அதை ஏற்றுக்கொள்ள மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மாறாக, ஆட்டத்தைப் பார்க்க வந்தவரிடம் தகராறில் ஈடுபடக்கூடாது," என்றார் அவர்.

இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து இன்ஸ்டகிராமில் பதி விட்ட நெய்மார், "நான் அவ்வளவு மோசமாகவா நடந்துகொண்டேன்? ஆமாம், ஆனால் எனது நிலையில் எவராக இருந்தாலும் அவர் பொறு மையாக இருந்திருக்க மாட்டார்," என்றார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, பிரான்சின் காற்பந்து ஆணையம் விதிக்கவுள்ள தண்டனையை எதிர்நோக்குகிறார் நெய்மார்.

நடப்பு சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் பருவத்தின் காலி றுதிக்கு முந்தைய சுற்றில் மான் செஸ்டர் யுனைடெட் குழுவிடம் பிஎஸ்ஜி தோல்வி கண்டதை அடுத்து, ஆட்ட நடுவர்களை தகாத வார்த்தைகளால் நெய்மார் திட்டினார். அவரது அந்த நடவடிக் கைக்காக மூன்று ஆட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!