ஹைதராபாத்: விராத் கோஹ்லிக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணிக்காக நீண்டகாலம் சேவை செய்பவராக லோகேஷ் ராகுல் திகழ்வார் என வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் (படம்) கூறியுள்ளார்.
"லோகேஷ் ராகுல் அபரி மிதமான திறமையுடைய பந்தடிப்பாளர். என் மனதில் எழுந்த சிறந்த வீரராக அவர் இருக்கிறார். கோஹ்லிக்கு பிறகு இந்திய அணிக்காக நீண்டகாலம் சேவை செய்பவராக ராகுல் உள்ளார். இதற்காக ராகுல் நெருக்கடியை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை," என்று கெய்ல் கருத்துரைத்தார்.
இந்த ஐபிஎல் தொடரில் லோகேஷ் ராகுல் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 520 ஓட்டங்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். கெய்ல் 448 ஓட்டங்கள் எடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

