மழையால் ஆட்டம் ரத்து; வெளியேறியது பெங்களூரு

பெங்களூரு: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டம் பெங்களூரு சின்னசாமி விளையாட்டரங்கில் நடைபெற்றது.

பூவா தலையாவில் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இருப்பினும், போட்டி தொடங்கு வதற்கு முன்பாக மழை குறுக் கிட்டது. நீண்டநேரம் மழை பெய்ததால் 3 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த ஆட்டம் 5 ஓவர் கொண்டதாக குறைக்கப்பட்டது.

இதன்படி பெங்களூரு அணி யின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித் தலைவர் விராத் கோஹ்லியும் டிவில்லியர்சும் களமிறங்கினர்.

நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, ராஜஸ்தான் பந்தடிக்கத் தொடங்கியது.

ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ஓட்டங்கள் எடுத்த போது மறுபடியும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் இந்த ஆட்டத்தை அத்துடன் கைவிடு வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேற பெங்களூரு அணிக்கு இருந்த சிறு வாய்ப்பு கலைந்தது.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி முதல் சுற்றுடன் வெளி யேறி இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கும் அடுத்த சுற்று வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!