லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற் பந்துப் போட்டிக்கான அரை இறுதிச் சுற்றின் முதல் ஆட்டத் தில் ஸ்பர்ஸ் குழுவும் ஹாலந்தின் அயேக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவும் நேற்று மோதின.
இந்த ஆட்டம் ஸ்பர்ஸ் குழுவின் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.
இருப்பினும், அயேக்ஸ் குழு விடம் 1=0 எனும் கோல் கணக்கில் ஸ்பர்ஸ் தோல்வியைத் தழுவியது.
ஆட்டத்தின் 15வது நிமிடத் தில் அயேக்ஸ் குழுவின் டானி வேன் ட பீக் கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.
ஸ்பர்ஸ் குழுவால் இறுதி வரை ஆட்டத்தைச் சமன் செய்ய முடியாமல் போக, முதல் ஆட்டத்தை அயேக்ஸ் கைப் பற்றியது.
வெற்றி பெற்றது மட்டுமல்லாது, எதிரணியின் விளையாட்டரங் கத்தில் கோல் போட்டு தனது நிலையை அது வலுப்படுத்திக் கொண்டது.
தோல்வி குறித்து ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகி மொரிசியோ பொக்கெட்டினோ ஏமாற்றம் தெரிவித்தார். தாம் தவறான உத்திகளைக் கையாண்டதால் தமது அணி தோல்வி அடைந்த தாக அவர் ஒப்புக்கொண்டார்.
இருந்தபோதிலும், தமது ஆட்டக்காரர்கள் ஆட்டத்தில் முழு கவனம் செலுத்தவில்லை என்று அவர் அதிருப்தி தெரி வித்தார். காயம் காரணமாக ஸ்பர்ஸ் குழுவின் நட்சத்திர வீரர் ஹேரி கேனும் இடைநீக்கம் செய்யப்பட்டதால் தாக்குதல் ஆட்டக்காரர் சன் ஹியூங் மின்னும் நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை.
அடுத்த வாரம் நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் குறைந்தது 2-0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றால்தான் இறுதி ஆட்டத்துக்கு ஸ்பர்ஸ் குழுவால் தகுதி பெற முடியும்.

