மும்பை: இந்திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் தலைவரான சுனில் கவாஸ்கர் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 34 குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சை செலவை ஏற்றுள்ளார்.
நவி மும்பையில் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி அனைத்துலக குழந்தை இதயப் பராமரிப்பு நிலையத்தை மும்பையில் நேற்று முன்தினம் கவாஸ்கர் திறந்து வைத்தார். அப்போது பேசிய கவாஸ்கர், "பொருளியல், சமூக அந்தஸ்து நிலை எப்படி இருந்தாலும் இதய நோயால் பாதிக்கப்பட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும்," என்றார்.
டெஸ்ட் போட்டிகளில் 34 சதங் களடித்ததை நினைவுகூரும் வித மாக 34 குழந்தைகளின் சிகிச்சை செலவுகளை அவர் ஏற்றார்.

