போர்ட்டோ: ஸ்பானிய காற்பந்துக் குழுவின் முன்னாள் தலைவரும் பிரபல கோல்காப்பாளருமான 37 வயது ஐகர் கசியசுக்கு (படம்) பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் உடல்நிலை சீராக இருந்து வந்தாலும் இனிமேல் இவரால் காற்பந்து விளையாட முடியாது எனச் சொல்லப்படுகிறது.
2010 உலகக் கிண்ணத்தையும் யூரோ கிண்ணத்தையும் இரு முறை வென்ற இவர் 1999 முதல் 2015 வரை ரியால் மட்ரிட் குழுவிற்காக ஆடினார். அதன்பின் போர்ச்சுகலின் போர்ட்டோ குழுவைப் பிரதிநிதித்து வருகிறார்.

