ஆர்சனல் அசத்தல்

ஆர்சனல் அசத்தல்

2 mins read

லண்டன்: யூரோப்பா லீக் காற்பந்து அரையிறுதி முதல் ஆட்டத்தில் ஆர்சனல் குழு 3-1 என்ற கோல் கணக்கில் வெலன்சியா குழுவை வீழ்த்தி, வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் முதல் நான்கு இடங்களுக்குள் முடிக்க அருமையான வாய்ப்பு கிட்டியபோதும் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோற்றதால் ஆர் சனல் பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது.

இந்த நிலையில், யூரோப்பா லீக்கில் கிடைத்த வெற்றி அக் குழுவினருக்கு உற்சாகம் அளிப்ப தாக அமைந்துள்ளது.

சொந்த எமிரேட்ஸ் அரங்கில் நேற்று அதிகாலை நடந்த ஆட்டத் தில் 11ஆம் நிமிடத்திலேயே எதிர் அணி கோலடித்ததால் இந்த முறையும் தோல்விதானோ என ஆர்சனல் ரசிகர்கள் மனந்தளர்ந்து போயினர்.

ஆயினும், அடுத்த கால்மணி நேரம் ஆட்டம் அவர்களின் முகங் களில் மலர்ச்சியை ஏற்படுத்தியது. ஏழு நிமிட இடைவெளியில் இரு கோல்களைப் போட்டு ஆர்சனலை முன்னிலைக்குக் கொண்டு சென் றார் அக்குழுவின் நட்சத்திர தாக் குதல் ஆட்டக்காரர் லாக்கஸெட்.

ஆட்டம் முடியும் தறுவாயில் இன்னொரு தாக்குதல் ஆட்டக் காரரான பியர் எமெரிக் ஒபமெயாங் கும் தன் பங்குக்கு ஒரு கோலைப் போட, ஆர்சனல் 3-1 என்ற கணக் கில் வெற்றியை ருசித்தது.

இரு கோல் முன்னிலை பெற்று இருந்தாலும் இறுதிக்கு முன்னேற இரு குழுக்களுக்கும் சம வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார் ஆர்சனல் நிர்வாகி உனாய் எமெரி.

சரித்திரம் படைத்த செல்சி

இதனிடையே, யூரோப்பா லீக்கில் தொடர்ந்து 16 ஆட்டங்களாகத் தோல்வி காணாத குழு என்ற சாதனையைச் செல்சி படைத்துள் ளது. ஐன்ட்ராக்ட் ஃபிராங்க்ஃபர்ட் உடன் நேற்று அதிகாலை செல்சி மோதிய அரையிறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை யில் முடிந்தது.

எதிரணி அரங்கில் கோலடித்த சாதகம் இருப்பதால் அடுத்த வாரம் தனக்குச் சொந்தமான ஸ்டாம் ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஒரு கோல் வித்தியாசத்தில் வென் றாலே அல்லது கோல் ஏதுமின்றி சமன் செய்தாலே போதும், செல்சி குழு இறுதிக்கு முன்னேறுவது திண்ணம்.