அஃப்ரிடிக்கு பதிலடி தந்த காம்பீர்

அஃப்ரிடிக்கு பதிலடி தந்த காம்பீர்

1 mins read

புதுடெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாகித் அஃப்ரிடி தமது சுயசரிதையில் முன்னாள் இந்திய வீரர் கௌதம் காம்பீர் பற்றி கடுமையாக விமர்சித்து இருந்தார். வாய்ச்சொல் வீரரான காம்பீர் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்தச் சாதனையையும் புரியவில்லை என்றும் அவர் டான் பிராட்மேன், ஜேம்ஸ் பாண்ட் போல நடந்துகொள்கிறார் என்றும் அஃப்ரிடி கூறியிருந்தார்.

அதற்குப் பதிலடி தரும் விதமாக, "அஃப்ரிடி ஒரு கோமாளி. பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா மருத்துவச் சுற்றுலா விசா அளித்து வருகிறது. அவர் இங்கு வந்து மனநல சிகிச்சை பெற்றுச் செல்லலாம்," என்று காம்பீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். அவரும் அஃப்ரிடியும் திடலில் சிலமுறை வார்த்தைகளால் மோதிக் கொண்டது நினைவுகூரத்தக்கது