'கோல்காப்பாளராக ட கியா நீடிப்பார்'

'கோல்காப்பாளராக ட கியா நீடிப்பார்'

1 mins read

ஹடர்ஸ்ஃபீல்ட்: தொடர்ந்து பல தவறுகளை இழைத்து வந்தாலும் ஹடர்ஸ்ஃபீல்ட் காற்பந்துக் குழுவிற்கெதிராக இன்றிரவு நடைபெறும் இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்டின் கோல்காப்பாளராக டாவிட் ட கியாவே செயல்படுவார் என்று அதன் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் தெரிவித்துள்ளார். யுனைடெட்டின் கடைசி நான்கு ஆட்டங்களில் தமது தவறுகள் காரணமாக ட கியா எதிரணிகளுக்கு மூன்று கோல்களை விட்டுத் தந்தார். இதனால், கடந்த ஐந்து பருவங்களில் நான்கு முறை யுனைடெட்டின் சிறந்த ஆட்டக்காரர் விருதைக் கைப்பற்றிய ட கியா பெரும் விமர்சனத்துக்கு ஆளானார்.