கார்டியோலா: மேன்சிட்டி தயார்

கார்டியோலா: மேன்சிட்டி தயார்

2 mins read

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவம் அடுத்த வார இறுதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் பட்டத்தை வெல்ல லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், லிவர்பூலைவிட ஒரு புள்ளி அதிகம் பெற்று முதல் நிலையில் இருக்கும் சிட்டி (இன்று அதிகாலை நடந்த லிவர்பூல்-நியூகாசல் போட்டிக்கு முந்தைய நிலவரம்), பட்டப் போட்டிக்குத் தயாராக இருக்கிறது என்று அதன் நிர்வாகி பெப் கார்டியோலா முழங்கியுள்ளார்.

அதே நேரத்தில், கடந்த வியாழ னன்று அதிகாலை நடந்த சாம்பி யன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டத் தில் பார்சிலோனாவிடம் தோற்ற தால் பிரிமியர் லீக்கிலும் லிவர்பூல் குழுவின் கதை முடிந்துவிட்ட தாகக் கருதிவிடக்கூடாது என்று கார்டியோலா எச்சரித்துள்ளார்.

"பார்சிலோனா - லிவர்பூல் ஆட்டம் பிரமிக்க வைக்கும்படியாக இருந்தது. அந்த ஆட்டத்தில் இரு குழுக்களுமே நம்பமுடியாத விதத் தில் ஆடின. அந்த ஆட்டத்தில் தோற்றது லிவர்பூலின் பிரிமியர் லீக் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் நினைக்க வில்லை," என்றார் அவர்.

இந்தப் பருவத்தில் இதுவரை 16 புள்ளிகளை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ள சிட்டி நாளை பின்னிரவு நடக்கும் ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டியுடனும் அடுத்த ஞாயிறு இரவு பிரைட்டனுடனும் மோதவிருக்கிறது.

கடந்த பிப்ரவரியில் பிரெண்டன் ரோஜர்ஸ் நிர்வாகியாகப் பதவி ஏற்ற பிறகு விளையாடிய ஒன்பது ஆட்டங்களில் லெஸ்டர் குழு ஆறில் வென்றுள்ளது.

சென்ற வார இறுதியில் ஆர்ச னலை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய லெஸ்டர், எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் வென்று பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடிக்கும் முனைப்புடன் உள்ளது. அது நடந்தேறினால் அக்குழு அடுத்த பருவ யூரோப்பா லீக்கில் விளையாடத் தகுதிபெறும்.

ரோஜர்ஸ் 2016ல் செல்டிக் குழுவின் நிர்வாகியாக இருந்த போது சிட்டியுடன் அக்குழு மோதிய இரு சாம்பியன்ஸ் லீக் ஆட்டங் களும் சமனில் முடிந்தன. அதனால், நாளைய ஆட்டத்திலும் லெஸ்டர் பெரும் சவாலை அளிக்கலாம் என கார்டியோலா எதிர்பார்க்கிறார்.

"ஒரு நிர்வாகியாக, பிரெண்டன் தமது திறமையை நிலைநாட்டி வருகிறார். பதவியேற்ற இரு மாதங் களிலேயே தான் விரும்பும் வகையில் லெஸ்டரை மாற்றியமைத் துள்ளார். அக்குழு ஆடிய மூன்று ஆட்டங்களை நான் கண்டேன். அவர்கள் ஆடியவிதம் என்னை மிகவும் கவர்ந்தது. நாளைய ஆட்டம் இறுதி ஆட்டத்தைப் போன்றதுதான் என்பதை சிட்டி வீரர்கள் உணர்ந் துள்ளனர்," என்றார் அவர்.

தொடைத் தசைநாரில் காயம் அடைந்துள்ளதால் சிட்டியின் நட் சத்திர வீரர் கெவின் டி பிரய்ன நாளைய ஆட்டத்தில் விளையாட மாட்டார். அதேபோல, முழங்கால் பிரச்சினையில் இருந்து இன்னும் முழுமையாகக் குணமடையாததால் மத்தியத் திடல் வீரர் ஃபெர்னாண் டினோவும் விளையாடமாட்டார் எனச் சொல்லப்படுகிறது.