மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது செல்சி

மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது செல்சி

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் லீக் பட்டியலில் செல்சி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் முதல் நான்கு இடத்தில் போட்டியை முடித்துக்கொண்டு சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அது நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அது வாட்ஃபர்ட் குழுவுடன் மோதியது. இதில் சிறப்பாக விளையாடிய செல்சி 3-=0 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது.

ரூபன் லாஃப்டஸ்= சீக், டேவிட் லூவிஸ், கொன்சாலோ ஹிகுவேன் ஆகியோர் செல்சிக்கு கோல் போட்டனர்.

மற்றோர் ஆட்டத்தின் ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவும் மான்செஸ்டர் யுனைடெட் குழுவும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. இந்த முடிவு யுனைடெட்டுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

சமநிலை கண்டதால் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வரும் வாய்ப்பை அது நழுவவிட்டது. இதன் காரணமாக சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற யுனைடெட் தவறியது. அதே போல ஆர்சனலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் அது 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. அதனால் லீக் பட்டியலில் முதல் நான்கு இடத்தில் வரும் வாய்ப்பு மிகவும் குறைந்துவிட்டது.