யுவென்டசின் டிபாலாவை வாங்க மேன்யூ பேச்சுவார்த்தை

யுவென்டசின் டிபாலாவை வாங்க மேன்யூ பேச்சுவார்த்தை

1 mins read
4ecbacc2-4c6d-4a26-9711-6a246abb7b2a
யுவென்டஸ் காற்பந்துக் குழுவுக்காக விளையாடி வரும் பவ்லோ டிபாலா -

மான்செஸ்டர்: இத்தாலியின் யுவென்டஸ் காற்பந்துக் குழுவுக்காக விளையாடி வரும் பவ்லோ டிபாலாவை (படம்) 85 மில்லியன் பவுண்டுக்கு வாங்க மான்செஸ்டர் யுனை டெட் குழு பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியல் தவரிசையில் ஆறா வது இடம்பிடித்து சாம்பியன்ஸ் லீக் தொடருக்கான வாய்ப்பை இழந்துள்ளது யுனைடெட். இதனால் குழுவை வலிமைப் படுத்த அந்த அதன் நிர்வாகி ஒலே குணார் சோல்சியார் முடிவு செய்துள்ளதாகக் கூறப் படுகிறது. தாக்குதல் வீரரான டிபாலா அர்ஜெண்டினாவைச் சேர்ந் தவர். இவர் கடந்த 2015 லிருந்து யுவென்டஸ் குழுவிற் காக விளையாடி வருகிறார். குழுவிற்காக இவர் விளையாடி 125 போட்டிகளில் 57 கோல்களை அடித்துள்ளார். அர்ஜெண்டினா குழுவிற்காக 19 போட்டிகளில் களம் இறங்கி ஒரு கோல் அடித்துள்ளார் இவர்.