வென்றே தீரவேண்டிய நிர்ப்பந்தத்தில் ஸ்பர்ஸ்

ஆம்ஸ்டர்டாம்: டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர், நெதர்லாந்தின் அயக்ஸ் காற்பந்துக் குழுக்கள் சிங்கப்பூர் நேரப்படி நாளை அதி காலை 3 மணிக்கு சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிச் சுற்றின் இரண் டாம் ஆட்டத்தில் பொருதவுள்ளன. 

ஏற்கெனவே ஸ்பர்சின் சொந்த அரங்கில் நடந்து முடிந்த இச்சுற்றின் முதல் ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில் அயக்ஸ் வென்றிருந்தது. இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றுக்கு ஸ்பர்ஸ் செல்ல வேண்டுமெனில், அயக்ஸ் அரங்கில் நடைபெறவுள்ள எதிர் வரும் ஆட்டத்தில் குறைந்தது ஒரு கோலையாவது ஸ்பர்ஸ் போட்டு ஆட்டத்தைக் கூடுதல் நேரத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும். இந்த ஆட்டத்தில் அயக்ஸ் குழு சமநிலை கண்டாலோ அல்லது வென்றாலோ அக்குழுவே இறுதிச் சுற்றுக்கு சென்றுவிடும்.

வலுவான நிலையில் உள்ள அயக்ஸ் குழுவை வெல்வது ஸ்பர் சுக்கு இமாலய சவாலாக இருந்தாலும் காயங்களிலிருந்து மீண்டு வந்து இந்த ஆட்டத்தில் முக்கிய ஆட்டக்காரர்களான யன் வெர்டோங்கன், எரிக் லமேலா ஆகியோர் களமிறங்கக்கூடும் என்பது ஸ்பர்சுக்கு புதுத்தெம்பைத் தந்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon