ஐரோப்பிய காற்பந்தில் இங்கிலாந்து எழுச்சி

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற் பந்துத் தொடரின் இறுதிப் போட் டிக்கு லிவர்பூல், ஸ்பர்ஸ் என இங் கிலிஷ் குழுக்கள் முன்னேறிய நிலையில், யூரோப்பா லீக்கின் இறுதிச் சுற்றிலும் ஆர்சனல், செல்சி என இரு இங்கிலிஷ் குழுக்களே பொருதவுள்ளன.
ஒரே பருவத்தில் ஐரோப்பாவின் இரு முக்கிய காற்பந்துத் தொடர் களின் இறுதிப் போட்டிகளில் ஒரே நாட்டைச் சேர்ந்த நான்கு குழுக்கள் மோதவிருப்பது இதுவே முதன்முறை. இந்தப் பெருமையைத் தட்டிச் சென்றது இங்கிலாந்து.
யூரோப்பா லீக் அரையிறுதி இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நேற்று அதிகாலை நடைபெற்றன. ஸ்பெயினின் வெலன்சியா குழுவை அதன் சொந்த மண்ணில் எதிர் கொண்ட ஆர்சனல் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆர்சனல் தரப்பில் ஒபமெயாங் மூன்று கோல்களையும் லாக்கஸெட் ஒரு கோலையும் அடித்தனர். முதல் ஆட்டத்திலும் 3-1 என வென்றிருந்ததால் ஒட்டுமொத்தத் தில் 7-3 என முன்னிலை பெற்று, ஆர்சனல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ஐன்ட்ராக்ட் ஃபிராங்க்ஃபர்ட்- செல்சி குழுக்கள் மோதிய முதல் அரையிறுதி ஆட்டம் 1-1 எனச் சமனில் முடிந்திருந்தது. இந்த நிலையில், நேற்று நடந்த 2வது அரையிறுதியிலும் அதே கோல் கணக்கில் ஆட்டம் முடிய, வெற்றி யாளரைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்புகள் முறை கையாளப்பட்டது. அதில் 4-3 என செல்சி வென்றது.
போட்டிக்குப் பின் பேசிய செல்சி நிர்வாகி மொரிசியோ சாரி, "பருவத்தின் கடைசி மாதத்தில் இப்படி ஓர் அருமையான செயல் பாட்டை இங்கிலிஷ் குழு ஒன்று வெளிப்படுத்துவது எளிதானதல்ல. மற்ற நாட்டுக் குழுக்களைவிட நாங்கள் அதிகமாக ஆடுகிறோம். இங்கிலாந்தில் காற்பந்தின் தரம் உயர்ந்த நிலையிலுள்ளது. பிரிமியர் லீக்கே உலகின் மிகச் சிறந்த லீக்," என்றார்.
யூரோப்பா லீக் இறுதிப் போட்டி இம்மாதம் 29ஆம் தேதியும் சாம்பி யன்ஸ் லீக் இறுதி ஆட்டம் ஜூன் 2ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!