புதுடெல்லி: இந்தியக் காற்பந்துக் குழுவின் புதிய பயிற்றுவிப்பாள ராக முன்னாள் குரோவேஷிய ஆட்டக்காரரும் பயிற்றுவிப்பாள ருமான இகோர் ஸ்டீமச், 51 (படம்), நியமிக்கப்படவுள்ளார்.
அனைத்துலக அளவில் 53 போட்டிகளில் ஆடியுள்ள ஸ்டீமச், 1998 உலகக் கிண்ணப் போட் டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். இவர் 2012-13 ஆண்டுகளில் குரோவேஷியக் குழுவிற்குப் பயிற்சி அளித்தார்.
மூன்றாண்டுகளுக்கு இவர் இந்தியக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப் படலாம் என்றும் மாத ஊதியமாக 25,000 அமெரிக்க டாலர் வழங்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது.

