'அடுத்த சேவாக் இவர்தான்!'

'அடுத்த சேவாக் இவர்தான்!'

1 mins read
5e6a399b-f5ea-4142-9ddd-3c05218d0874
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் 78 ஓட்டங்களை விளாசி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு வெற்றி தேடித் தந்த ரிஷப் பன்ட்டை தூக்கிக் கொண்டாடும் இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி. படம்: ஏஎஃப்பி -

விசாகப்பட்டினம்: கிரிக்கெட் விளையாட்டில் அதிரடி ஆட்டத் திற்குப் பெயர்போன இந்திய வீரர் வீரேந்தர் சேவாக். அவர் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், இந்தத் தலைமுறையின் சேவாக் என முன்னாள் இந்திய வீரரும் இப்போதைய வர்ணனையாளரு மான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இளம் விக்கெட் காப்பாளர் ரிஷப் பன்ட்டை கைகாட்டுகிறார்.

கடந்த புதன்கிழமை இரவு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் டி20 போட்டியில் 21 பந்துகளில் 49 ஓட்டங்களை விளாசினார் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக் காக ஆடிவரும் பன்ட்.

நடப்பு ஐபிஎல்லில் நேற்றைய 'குவாலிஃபையர் 2' ஆட்டத் திற்கு முன்னதாக 15 போட்டி களில் ஆடியிருக்கும் இவர், 163.63 என்ற பந்தடிப்பு விகிதத் துடன் 450 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

"பன்ட்டை அணிக்குத் தேர்வு செய்கிறீர்களோ இல்லையோ, அவரை அவர் போக்கில் ஆட விடுங்கள்!" என அறிவுறுத்தி உள்ளார் மஞ்ச்ரேக்கர்.