பிரிஸ்பன்: நியூசிலாந்து லெவன் கிரிக்கெட் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் பயிற்சி ஆட்டத் தில் ஆஸ்திரேலிய லெவன் அணி 'டக்வொர்த் லூவிஸ்' முறைப்படி 16 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகளுக்கு இடை யிலான முதல் ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியாவும் 2வது ஆட்டத்தில் நியூசிலாந்தும் வென்றிருந்தன.
இந்நிலையில், நேற்று நடந்த 3வது, கடைசி போட்டியில் முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 286 ஓட்டங்களை எடுத்தது.
அடுத்து பந்தடித்த ஆஸ்தி ரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 91 ஓட்டங்களை யும் மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 70 ஓட்டங்களையும் விளாசினர். ஆஸ்திரேலிய அணி 44 ஓவர் களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதை அடுத்து, 'டக்வொர்த் லூவிஸ்' முறைப்படி அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

