லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் (இபிஎல்) இன்றிரவு நடைபெறும் இறுதி காற்பந்து ஆட்டங்களே பட்டத்தை வெல்லப்போவது லிவர்பூலா மான் செஸ்டர் சிட்டியா என்பதைத் தீர்மா னிக்கும். இன்று நடைபெறும் 10 ஆட்டங்களும் இரவு 10 மணிக்குத் தொடங்குகின்றன. அவற்றில் இரு முக்கிய ஆட்டங்களில் ஒன்றில், இபிஎல் பட்டியலில் 94 புள்ளிகளுடன் இரண்டாம் நிலை வகிக்கும் லிவர்பூல் தனது சொந்த அரங்கில் உல்வ்ஸ் குழுவை எதிர்கொள்கிறது. மற்றோர் ஆட்டத்தில் பிரைட்டனின் சொந்த மண்ணில் அக்குழுவுடன் பட்டியலில் முதல் நிலை வகிக்கும் மான்செஸ்டர் சிட்டி பொருதுகிறது.
இப்பருவத்தில் இதுவரை விளை யாடியுள்ள 37 ஆட்டங்களில் லிவர் பூலைவிட மேன்சிட்டி கூடுதலாக ஒரு புள்ளி மட்டுமே பெற்றுள்ள நிலையில், பிரைட்டன் உடனான இன்றைய ஆட்டத்தில் மேன்சிட்டி தோற்று அல்லது சமன் செய்து, உல்வ்ஸ் உட னான ஆட்டத்தில் லிவர்பூல் வென்றால் இபிஎல் பட்டம் லிவர்பூல் கைவசமாகி விடும். சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் பலம்வாய்ந்த பார்சிலோனாவிடம் 3-0 எனும் கோல் எண்ணிக்கையில் அடிபணிந்தாலும் அச்சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் 4-0 எனும் கோல் எண்ணிக்கையில் முற்றிலும் எதிர்பாராத விதமாக அந்தக் குழுவைத் தகர்த்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ள லிவர்பூல், வெற்றியாளரை நிர்ணயிக்கும் இபிஎல் போட்டியின் கடைசி ஆட்டத்தில் தோல்வியுறுவது கிட்டத்தட்ட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதே வேளையில், இப்பருவத்தின் ஒரு கட்டத்தில் லிவர் பூலைவிட ஏழு புள்ளிகள் பின்தங்கி இருந்த மேன்சிட்டி, பிறகு கடினமாக போராடி முன்னுக்கு வந்து இப்போது மயிரிழையில் பட்டத்தை நழுவ விடு வதையும் எதிர்பார்க்க முடியாது.
இந்நிலையில், இன்றைய ஆட்டங் களில் எதிரணிகளைக் குறைத்து எடை போட்டுவிடக்கூடாது என்பதில் லிவர்பூல், மேன்சிட்டி நிர்வாகிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். ஏனெனில், காற்பந்து உலகில் சிறப் பான ஆட்டத்திறனை வெளிப்படுத் தினால் யார் எவரை வேண்டுமானாலும் வெல்லலாம் என்பதை அவர்கள் நன்கு அறிந்துள்ளனர்.
"சாம்பியன்ஸ் லீக்கில் எங்களுக்குக் கிடைத்த அரிய வெற்றியினால் நிரம் பிய தன்னம்பிக்கை, கடைசி இபிஎல் ஆட்டத்திலும் வெளிப்பட வேண்டும். தாங்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உல்வ்ஸ் ஆட்டக் காரர்கள் நிரூபிக்க முற்படுவர். உல்வ்ஸ் சிறந்த காற்பந்துக் குழு. எனவே நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்," என்கிறார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.
அதே சமயத்தில், இப்பருவத்தில் கடைசியாக தனது சொந்த அரங்கில் விளையாடும் பிரைட்டன் குழு, ரசிகர் களுக்குப் பெருமை சேர்ப்பதற்காக எதையும் செய்ய துணியும் என்ற கிளோப், அதுவே மேன்சிட்டிக்கு எச்ச ரிக்கை ஒலியாக இருக்கும் எனக் கருதுகிறார். இபிஎல் பட்டியலில் உல்வ்ஸ் ஏழாவது நிலையிலும் பிரைட் டன் 17வது நிலையிலும் உள்ளன.
இம்முறை இபிஎல் பட்டத்தை மேன்சிட்டி தக்கவைக்கவில்லை என்றால் அக்குழு நிலைகுலைந்துவிடும் என்று அதன் நிர்வாகி பெப் கார்டி யோலா எச்சரித்துள்ளார். இவ்வளவு தூரம் கடந்து வந்து கடைசி கட்டத்தில் சறுக்கிவிட்டால் மேன்சிட்டி கடுமை யான விமர்சனத்தை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார். "சாம்பியன்ஸ் லீக் இறுதிச் சுற்றுக்குச் சென்று இருக்கவேண்டிய பார்சிலோனா, அயக்ஸ் குழுக்கள் அதிர்ச்சி தரும் விதமாக வெளியேறி விட்டதால் அவற்றுக்குக் கிடைத்துள்ள விமர்சனத்தைக் கவனித்தாலே போதும்," என்றார் அவர்.

