கிரிக்கெட்: இலங்கை முன்னாள் வீரர்கள் ஜோய்சா, குணவர்தனே இடைநீக்கம்

கிரிக்கெட்: இலங்கை முன்னாள் வீரர்கள் ஜோய்சா, குணவர்தனே இடைநீக்கம்

1 mins read

துபாய்: இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான் ஜோய்சா, முன்னாள் பந்தடிப்பாளர் அவிஷ்க குணவர்தனே ஆகியோரை சூதாட்ட புகாரின் பேரில் அனைத்துலக கிரிக்கெட் மன்றம் இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு சிற்றரசுகளில் நடந்த 10 ஓவர்கள் கொண்ட லீக் போட்டியில் பங்கேற்ற அந்த இருவர் மீதும் எழுந்த சூதாட்ட புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.