ஐபிஎல்: 150 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் ஹர்பஜன் சிங்

ஐபிஎல்: 150 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது இந்தியர் ஹர்பஜன் சிங்

1 mins read

புதுடெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டி யில் ரதர்போர்ட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆவார். ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் மும்பை அணியின் லசித் மலிங்கா (169 விக்கெட்டுகள்), டெல்லி அணியின் அமித் மிஸ்ரா (156 விக்கெட்டுகள்) எடுத்து முதல் இரு நிலைகளைப் பிடித்துள்ளனர். 150 விக்கெட்டுகள் எடுத்த கோல்கத்தா அணியின் பியூஷ் சாவ்லாவும் சென்னையின் ஹர்பஜன் சிங்கும் மூன்றாவது நிலையில் உள்ளனர்.