மும்பையுடன் இன்று மோதும் சென்னை அணி

மும்பையுடன் இன்று மோதும் சென்னை அணி

2 mins read

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று இரவு நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித் சர்மா தலை மையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணியை வீழ்த்தி நான் காவது முறையாக கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. முதலாவது 'குவாலிஃபையர்' ஆட்டத்தில் மும்பை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி இறுதிப் போட் டிக்குத் தகுதி பெற்றது. அந்த ஆட்டத் தின் சென்னை அணியின் பந்தடிப்பு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

இந்நிலையில், தோல்வியிலிருந்து மீண்டு வந்து விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது 'குவாலிஃபையர்' ஆட்டத்தில் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

சென்னை, மும்பை இரு அணிகளும் ஐபிஎல் கிண்ணத்தை மூன்று முறை வென்றுள்ளன. சென்னை அணி 2010, 2011, 2018 ஆகிய ஆண்டுகளிலும் மும்பை இந்தியன்ஸ் 2013, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் கிண்ணத்தை வென்றுள்ளன. இதனால் நான்காவது முறையாக வெற்றியாளர் பட்டம் வெல்ல போவது சென்னையா மும்பையா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி எட்டாவது முறை யாகவும் மும்பை அணி ஐந்தாவது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. நடப்பு வெற்றியா ளரான சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் பருவத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வந்தாலும் மும்பையிடம் மூன்று முறை தோல்வியைத் தழுவி யது. இரண்டு லீக் ஆட்டங்களிலும் முதலாவது 'குவாலிஃபையர்' ஆட்டத் திலும் அக்குழு மண்ணைக் கவ்வியது.

கடந்த பருவத்தில் சன்ரைசர்ஸ் ஹைத ராபாத் அணியை சென்னை மூன்று முறை வென்று இறுதிப் போட்டியிலும் அக்குழுவைத் தோற்கடித்தது குறிப் பிடத்தக்கது. இன்றைய இறுதிப் போட்டியில் சென்னை அணி பழிதீர்த்து கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது. பலம்வாய்ந்த மும்பையை வீழ்த்த பந்தடிப்பு, பந்து வீச்சு, களக்காப்பு என அனைத்து துறைகளிலும் சென்னை அணி சிறப் பாக செயல்பட்டு கடுமையாகப் போராட வேண்டியது அவசியமாகும். சென்னை யை மும்முறை வீழ்த்தியதால் மும்பை மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.