மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது 'நோ பால்' விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து நடுவர் நைஜல் லாங்குடன் பெங்களூரு அணித் தலைவர் விராத் கோஹ்லி, உமேஷ் யாதவ் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த நடுவர் நைஜல் ஓய்வு
அறைக்குத் திரும்பியபோது கோபத்தில் அறை கதவைக் காலால் உதைத்தார். இதனால் கதவு சேதம் அடைந்தது. பின்னர் அவர் தனது தவற்றை உணர்ந்து சேதத்திற்கான தொகையை கொடுத்தார்.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறும்போது, "ஐபிஎல் போட்டியில் நைஜல் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. அவர் கோபத்தில் அப்படி நடந்து கொண்டார். இது மனித இயல்புதான்.
அவர் தனது தவற்றை உணர்ந்து சேதத்துக்குப் பணம் செலுத்திவிட்டார். இதோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது," என்றார்.

